திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ரெக்ஸ்ஸ்டாலின் ரோந்துப் பணியில் ஈடுபட்டபொழுது, சோபனபுரம் சுடுகாடு அருகே 5 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கையும்,
களவுமாக பிடித்து அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ.2850 பறிமுதல் செய்யப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்டது சோபனபுரத்தைச் சேர்ந்த வரதராஜ் (வயது 63), முருகன்(வயது 54), செந்தில் (வயது 44), சந்திரசேகர் (வயது 54), கோணக்கரையை சேர்ந்த பிரபு (வயது35) ஆகிய 5 பேர் மீது உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.