லால்குடியில் புதிய பஸ் நிலையம்; நகராட்சித் தலைவர் உறுதி!
திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, நகராட்சியின் முதல் கூட்டம் அதன் கூட்ட அரங்கில் நடந்தது.
கூட்டத்திற்கு நகராட்சித் தலைவர் துரைமாணிக்கம் தலைமை
வகித்தார். துணைத்தலைவர் சுகுணா, கமிஷனர்
குமார், பொறியாளர் விஜய் கார்த்திக் (பொறுப்பு),
நகரமைப்பு ஆய்வர் குமரேசன் (பொறுப்பு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக கவுன்சிலர்கள் மதியழகன், வைரகாவியன், செந்தில்மணி, சங்கர், ஆறுமுகம், மாரிக் கண்ணன், முஸ்தபா, செந்தில்நாதன், மணிமுருகன், அலமேலுமங்கை, லதா, சர்மிளாபானு, கவுதமி, ராதிகா, சாரதா, அமுதா, ராதிகா, விஜயலட்சுமி, அதிமுக கவுன்சிலர்கள் மருதமலையான், முகமது பெரோஸ், ராஜம்காத்தான், பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் வார்டுக்கு தேவையான வசதிகள் குறித்து பேசினர். லால்குடி நகராட்சியில் புதிய பஸ் நிலையம், புதிய நகராட்சி அலுவலகம், பச்சண்ணபுரம் பகு தியில் உள்ள வடக்கு அய்யன் வாய்க்கால் கரை யில் அமைந்துள்ள இடுகாட்டில் புதிய நவீன எரிவாயு தகன மேடை கட்டுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட ன.