திருச்சியில் காவலர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் உடல் தகுதி தேர்வு!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-ஆம் ஆண்டிற்கான இரண்டாம்நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 13.12.2020 அன்று நடைபெற்றது.

எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் அடுத்தகட்டமாக சான்றிதழ் சரிப்பார்த்தல் மற்றும் உடற்தகுதி தேர்வு 26.07.2021-ந் தேதி முதல் 04.08.2021-ந் தேதி வரை திருச்சி, சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைப்பெற்றது.இதில் கடைசி நாளான இன்று (04.08.2021) பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அசல்சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல் மற்றும் உடற்தகுதி தேர்வு (400 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 30 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும்) தேர்வுகள் நடைபெற்றது.
இத்தேர்வின் மேன்பட்ட ஆய்வு அதிகாரியாகிய திருச்சி மாநகர காவல் ஆணையர் A.அருண் மேற்பார்வையிட்டார்.மேலும் நாளை முதல் (05.08.2021) ஆண்களுக்கான உடற்திறனாய்வு தேர்வு நடைபெறும் என்பதை திருச்சி மாநகர காவல்துறையின் மூலம் தெவித்துக்கொள்ளப்படுகிறது.