குழந்தைகள் காப்பகத்தில் இருந்த சிறுமி மாயம்!
புலிவலம் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவிக்கு அவருடைய தாய் திருணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வதை அறிந்து சமூக நலத்துறை
அதிகாரிகள் மூலம் அவர் மீட்கப்பட்டு, திருச்சி, சுந்தர்நகர் பகுதியில் உள்ள நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அந்த சிறுமி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வழக்கம்போல்
பைக்கில் உதவியாளருடன் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனிடையே அவர்கள் உணவருந்த சென்றபோது அவர்களிடம் இருந்து பிரிந்து சென்ற மாணவி மீண்டும் குழந்தைகள் காப்பகத்திற்கு திரும்பவில்லை. இதையடுத்து
மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் சாந்தி. சிறுமியை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். அதன் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.