திருச்சி தில்லைநகர் 7வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 45). இவர் நேற்று மதியம் 12 மணியளவில் அங்குள்ள 80 அடி சாலை பகுதியில் உறவினர் ஒருவரை பார்க்க நடந்து சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் வழி மறித்தனர். பின்னர் கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தாலி செயினைப் பறிக்க முயன்றனர். அப்போது செயினை விடாமல் அப்பெண் கெட்டி யாக பிடித்துக்கொண்டு
கொள்ளையர்களிடம் போராடினார். இதில் அந்த தாலிச்செயின் அறுந்தது. இதில் கொள்ளையர்கள் வசம் 10 பவுன் சிக்கியது. அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். மீதமுள்ள 5 பவுன் மட்டும் மகேஸ்வரி வசமானது. இது பற்றி மகேஸ்வரி தில்லை நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து
விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.