குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!

0 367
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள பாலையூர் ஊராட்சியை சேர்ந்த காவேரி கொட்டம் என்ற பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதிக்கு கடந்த நான்கு நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளனர். இதுபற்றி ஊராட்சி தலைவர் மற்றும் மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50 பெண்கள் காலி குடங்களுடன் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து எதுமலை நோக்கி சென்ற அரசு பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றிய தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.