கோவிலுக்குச் சென்ற முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி பலி!
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள கல்லுபட்டியைச் சேர்ந்தவர் கருத்தமணி வயது 70 என்பவர் மேனிவயல் பிரிவு சாலை அருகே உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு செல்லும்போது மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கருத்தமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் துவரங்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் துவரங்குறிச்சி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.