நாளை தொடங்குகிறது குழந்தைகள் வளர்ச்சித் திட்ட முகாம்!

0 400
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்,போஷான் அபியான் திட்டத்தின் கீழ் நாட்டில் ஆரோக்கியமான குழந்தையை கொண்டாடுவதற்காக “ஸ்வஸ்த பாலக் பாலிகா ஸ்பர்தா” எனும் திட்டமானது பிறப்பு முதல் 6 வயதுகுட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை தெரிந்துகொள்ள அவர்களின் எடை மற்றும் உயரம் அளவீடு செய்யதிட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி,கிராம ஊராட்சி போன்ற அனைத்து பகுதிகளில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் மூலமாக நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 27-ந்தேதி வரை அங்கன்வாடி பணியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், அரசு சாரா நிறுவனபிரதிநிதிகள், மூலம் அங்கன்வாடி மையங்கள், மருத்துவமனைகள், வீடுகள், சமுதாய கூடம், மற்றும் பள்ளிகள் ஆகிய இடங்களில் பிறப்பு முதல் 6 வயதுகுட்பட்ட அனைத்து குழந்தைகளின் எடை மற்றும் உயரம் அளவீடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் குழந்தைகளின் எடை மற்றும் உயரம் அளவீடு செய்து தங்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை அறிந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.