ஸ்ரீரங்கத்தில் அரசு பஸ் மோதி சுற்றுலா பயணி பலி!
திருச்சி ஸ்ரீரங்கத்திற்க்கு வந்த ஆந்திர மாநிலம் சுற்றுலா பயணி தண்டும்மாள்(வயது 60) என்பவர் அம்மா மண்டபம் ரோட்டில் புஷ்பக் நகர் எதிரே இன்று ஸ்ரீரங்கம்-ஜங்சன் செல்லும் அரசு பேருந்து மோதி படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல்

தெரிவித்தனர். தகவலின் பேரில் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூதாட்டி தண்டும்மாளை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.