மதுப்பிரியர்களை தலைதெறிக்க ஓடவிட்ட ஏசி; சந்தேகத்திற்கு இடமானவர்களை பிடித்து விசாரணை!

0 420
Stalin trichy visit

திருச்சி செல்வ நகர் பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக திருச்சி மெயில் இணைய பதிப்பில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த கண்டோன்மெண்ட் போலீஸ் நிலைய ஏசி அஜய் தங்கம், இன்ஸ்பெக்டர் சேரன் தலைமையிலான போலீசார் தொடர்ந்து அப்பகுதியை கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் சம்பவத்தன்று இரவு அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சென்றவர்களை பிடித்து

விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் அப்பகுதி மக்களிடம் கூறுகையில், விலையுயர்ந்த நகைகளை வீட்டில் வைக்க வேண்டாம். பாதுகாப்பாக வங்கி லாக்கரில் வைக்க வேண்டும். வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும்போது அடையாளம் தெரியாதவர்கள் வந்தால் கதவை திறக்கக்கூடாது. மேலும் சந்தேகத்திற்கு இடமாக சிலர் நடமாடுவதாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால்  சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நகைகளுக்கு

பாலீஸ் போடுகிறோம் என எவரேனும் தங்கள் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்ரிந்தால் உடனே தகவல் தெரிவிக்கவேண்டும். வெளியூர் செல்லும்போது வீட்டின் ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதா?, கியாஸ் ஆன் செய்யப்பட்டு உள்ளதா?  என ஒரு முறைக்கு இருமுறை பார்த்த பிறகு செல்ல வேண்டும். இல்லை என்றால் திருடர்களுக்கு சாதகமாக அமைந்து விடும். முடிந்தால் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதினால் திருட்டு சம்பவங்களை தடுக்க முடியும் என்றனர். தொர்ந்து செல்வநகர் பகுதியை போலீசார் அவ்வப்போது வாகன சோதனை வந்து கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் அப்பகுதியில் மது அருந்துபவர்களின் தலைதெறிக்க ஓட்டம் பிடித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.