தெருநாய்களின் பெருக்கத்தை இப்படிதான் கட்டுப்படுத்த முடியும்; விரைவில் வருகிறது கூடுதலாக 3 மையம்!

0 305
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டத்தில், நாய் தொல்லை குறித்தும், அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கவுன்சிலர் பேசினர். அதற்கு பதிலளித்த மேயர் அன்பழகன், நாய்களை பிடிக்க முடியாது. அதனால், அதன் பெருக்கத்தை குறைக்க நாய்களுக்கு கருத்தடை செய்ய முடியும். திருச்சியில்

அதற்கான மையம் ஒன்று மட்டும் தான் இருந்தது. இப்போது கூடுதலாக 3 மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், இவற்றை கட்டுப்படுத் துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பீட்டா, ப்ளூ கிராஸ் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத் தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் முஜிபுர் ரகுமான் கூறுகையில், திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை, இன்றைய நிலவரப்படி 8 ஆயிரம் நாய்கள் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றை பிடிக்க கோர்ட் தடை உத்தரவு உள்ளதால், அவற்றை பிடித்து கருத்தடை செய்து அதே பகுதியில் மீண்டும் விடுகிறோம். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக இப்பணி நடைபெறவே இல்லை. இப்போது மீண்டும்

தொடங்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள நாய்கள் கருத்தடை மையத்தில் நாளொன்றுக்கு 15 முதல் 20 நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யமுடியும். புதிதாக கட்டப்படும் 3 மையங்களும் ஏப்ரல் மாதம் செயல்பாட்டுக்கு வரும் போது, தினமும் 60 முதல் 70 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படும். இதன்மூலம் நாய்களின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.