பொன்னம்பட்டி பேரூராட்சி மாமன்ற கூட்டம்; மக்களின் அடிப்படை தேவை குறித்து விவாதம்!
திருச்சி மாவட்டம், பொன்னம்பட்டி பேரூராட்சியின் முதல் மாமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சரண்யா நாகராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வெற்றி பெற்ற அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். பின் கூட்டத்

தொடரில் உறுப்பினர்களின் கடமையும், உரிமையும் பற்றிய அறிமுகமும் பேரூராட்சி அலுவலகத்தின் அலுவலக சிப்பந்திகளுடனும் அறிமுகமும் நடைபெற்றது. தொடர்ந்து கூட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.