புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மெஸ்சியர் தொலைநோக்கியை கலெக்டர் சிவராசு திறந்து வைத்தார்!

0 386
Stalin trichy visit

தூய வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறை இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் இணைந்து இந்த தொலைநோக்கியை கண்டுபிடித்து உள்ளதாகும். ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொலைநோக்கிகளை ஒப்பிடும்போது இதில் நவீனமயமான பல ஆய்வுகளுக்கு பயன்படும் வகையில் கோள்களின் வேகம் மற்றும் நகர்வுகளை கண்டுபிடிக்க

உதவும் திறன் கொண்டது என்கிறார் இயற்பியல் துறை பேராசிரியர் கிறிஸ்துராஜ். தொடர்ந்து இயற்பியல் துறை மாணவர்- தொலைநோக்கியை கண்டுபிடித்த மாணவர்களில் ஒருவரான ஆழி முகிலன் கூறுகையில், வெள்ளி கோளின் வளி மண்டலத்தில் இருக்கக்கூடிய வாயுக்களை ஆராய்வது சூரியனின் கருப்பு புள்ளி நகர்வுகளை வைத்து அதன் வேகம் மற்றும் நகர்வை ஆராய்வது போன்ற தேவைகளுக்கு இந்த தொலைநோக்கி முற்றிலும் பயன்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறுகையில்,

அப்துல் கலாம் போன்ற பல விஞ்ஞானிகள், அறிஞர் பெருமக்கள் உங்கள் துறையில் படித்து பல சாதனைகளை புரிந்துள்ளார்கள். எந்த துறையாக இருந்தாலும் அந்த துறையின் மீதும்,படிக்கும் பாடம் மீதும் ஆர்வமும் ஈடுபாடும் மாணவர்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும். மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருபோதும் தாழ்வு மனப்பான்மை தங்களுக்குள் வருவதற்கு அனுமதிக்கக் கூடாது என்றார்.

 

Leave A Reply

Your email address will not be published.