கீழவாளாடி உலகநாயகி அம்மன் கோவில் திருவிழா
திருச்சி கீழவாளாடியில் அமைந்துள்ள உலகநாயகி அம்மன் கோவில் திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த குதிரை வாகனத்தில் அம்மனை அமரச்செய்து வீதிஉலா நடைபெற்றது.

இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.