நூதன முறையில் வீடு வாடகை; வங்கி ஊழியர்கள் வீட்டுக்கு வந்ததால் வாடகையாளர் அதிர்ச்சி!

0 316
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரையடுத்த நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த ராஜி என்பவரின் மனைவி சாரதா(வயது 36). மேலும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் அலெக்சாண்டர்(வயது 64), அவரது மனைவி ராணி(வயது 53). இந்த நிலையில் சாரதாவிடம் அலெக்சாண்டர் அண்ணாநகரில் தங்களுக்கு ஒரு வீடு உள்ளதாகவும், அந்த வீடு காலியாக உள்ளது என்றும் தாங்கள் அதற்கு வாடகைக்கு வருவதென்றால் வரலாம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து சரிதா ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் முன்பணம் கொடுத்து, அவர்கள் வீட்டிற்கு குடியேறியுள்ளார். ஓரிரு நாட்கள் கழித்து இந்தியன் வங்கியில் உள்ள அதிகாரிகள்

திடீரென அந்த வீட்டிற்கு வந்து வீட்டை ஜப்தி செய்யப் போவதாகவும் தாங்கள் வெளியேற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் இதனை அடுத்து சரிதா அலெக்சாண்டரிடம் கூறியபோது அதற்கு எந்த தகுந்த பதிலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து சரிதா தான் கொடுத்த முன் பணத்தை திருப்பி கேட்டும் கொடுக்காததால் இதுகுறித்து நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் அலெக்சாண்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.