மணிகண்டம் ஒன்றியத்தில் “வட்டார முதலீட்டுத் திட்டம்” பற்றிய திட்ட விளக்க கூட்டம்

0 431
Stalin trichy visit

மணிகண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட வட்டார அளவில் தொடர்புடைய அனைத்து துறைகளின் அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்கள் உடன் வட்டார முதலீட்டு திட்டம் பற்றிய விளக்கக் கூட்டம் ஆகஸ்ட் 6ஆம் தேதி மணிகண்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது ‌.

இதில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மாவட்ட செயலாளர் ஆரோன் ஜோஸ்வா ரூஸ்வெல்ட் கலந்துகொண்டு வட்டார முதலீடு திட்டம் பற்றிய திட்ட விளக்க உரையை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் ஒன்றியக்குழு தலைவர் கமலம் கருப்பையா திருச்சி வர்த்தக மைய தலைவர் கனகசபாபதி மற்றும் நபார்டு வங்கி உதவி பொது செயலாளர் கார்த்திக் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் நாட்டு மாட்டுப்பால் விற்பனைக்காக அனைவரின் முன்னிலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் மணிகண்டம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர்கள் மணிகண்டம் ஊராட்சி செயலாளர்கள் அனைத்து வங்கி மேலாளர்கள் கால்நடை மருத்துவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

Leave A Reply

Your email address will not be published.