கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் – திருச்சி அறிவாலயத்தில் மாலை அணிவித்து அஞ்சலி!

0 430
Stalin trichy visit

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரின் திருஉருவ சிலைக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் அன்பழகன், வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் (எம்எல்ஏ), சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் , மாவட்ட துணைச் செயலாளர் விஜய ஜெயராஜ்,பகுதி செயலாளர்கள் இளங்கோ, கண்ணன், ராம்குமார், காஜாமலை விஜி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலும் உள்ள கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

Leave A Reply

Your email address will not be published.