ஒரு மாதமாக நல்ல தண்ணீர் வரவில்லை என புகார் – 24 மணி நேரத்தில் தீர்வு கொடுத்த கிழக்கு தொகுதி எம்எல்ஏ
திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருப்பவர் இனிகோ இருதயராஜ். சட்டமன்றத்தில் திருச்சிக்காக குரல் கொடுத்தது முதல் தொகுதி மக்களின் நலனுக்காகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் .

தொடர்ந்து பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து சம்பவ இடத்திற்கு சென்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியும் வருகிறார்.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் ஏர்போர்ட் அருகே சுதானா பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நல்ல குடி தண்ணீர் வரவில்லை என நேற்று கிழக்கு தொகுதி எம்எல்ஏ விடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில் புகார் அளித்த 24 மணி நேரத்தில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு துரிதமாக நடவடிக்கை எடுத்து நல்ல குடி தண்ணீரை அப்பகுதி மக்களுக்கு கொண்டு போய் சேர்த்துள்ளார்.
இதற்கு அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் எம்எல்ஏவுக்கு தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறியhttps://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA