உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் சார்பில் மரம் நடும் விழா
திருச்சி, ஜூன் 10 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஈஷா காவேரி கூக்குரல் இந்த ஆண்டுக்கான மரம் நடும் பணி ஜூன் 5 ஆம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளில் விவசாய நிலங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி வட்டம் குமுளூர் கிராமத்தில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் , ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்துடன் இணைந்து மாசிலாமணி முதல்வர் (பொறுப்பு) , வள்ளியம்மை நீர் பாசனம் மற்றும் வடிகால் பொறியியல் துறை தலைவர் மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது