“மனுநீதிநாள் முகாம்” 48 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

0 472
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள நடராஜபுரத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருச்சி ஆர்டிஒ தவச்செல்வம் தலைமை தாங்கினார். முகாமில் வருவாய்த்துறை மற்றும் சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை 4 பேருக்கும், மாற்றுத்திறனாளி உதவித்தொகை 3 பேருக்கும், கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை 2 பேருக்கும், முதியோர் உதவித்தொகை 4 பேருக்கும் என ரூ.ஒரு லட்சத்தில் 56 ஆயிரம் மதிப்பிலான மற்றும் உதவித்தொகை உழவர் அட்டை 16 பேருக்கு என 29 பேருக்கு

வழங்கப்பட்டது. வருவாய்துறை சார்பில் நத்தம் பட்டா நகல் 7 பேருக்கும், நத்தம் பட்டா மாற்றம் 3 பேருக்கும், உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் மின்னணு குடும்ப அட்டை 5 பேருக்கும், வேளாண்துறை சார்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் சார்பில் 2 நபருக்கு 6 ஆயிரம் ரூபாயையும், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம்சர்வ 2 பேருக்கு 42 ஆயிரத்து 950 வழங்கினார். பின்னர் தவச்செல்வன் பேசுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மனுநீதிநாள் சிறப்பு முகாம் நடத்த முடியவில்லை. கொரொனாவிற்குப்பிறகு தற்போது திருவெறும்பூர் வட்டத்தில் நடராஜரபுரத்தில்

தான் முதன் முதலில் நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாமில் தற்போது வேளாண்துறை அதிகாரிகள் மட்டுமே உள்ளார்கள். இனி வரும் காலங்களில் நடத்தப்படும் முகாம்களில் அனைத்துத்துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்து விளக்கிக்கூறுவார் என்று கூறினார். இதில் திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ், தனி தாசில்தார் கண்ணன், திருவெறும்பூர் வேளாண் உதவி இயக்குனர் எஸ்தர் பிரம்மகுமாரி, நடராஜபுரம், ஊராட்சி மன்ற தலைவர் சத்யா கீதாதாஸ், திருவெறும்பூர் அறைகள் கோகிலா சரவணன் கீதா மற்றும் அரசு அலுவலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.