“இருக்கு ஆனால் இல்ல” பொன்னகர் இந்தியன் வங்கியின் வசூல் யுக்தி!

0 450
Stalin trichy visit

திண்டுக்கல் திருச்சி சாலை ஓரத்தில் பொன்னகர் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி சுற்றுப்பகுதியை சேர்ந்தவர்கள் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர். அவர்கள் பணம் எடுக்க வரும்போது எளிதில் எடுத்துச்செல்லும் வகையில், வங்கியின் அருகிலேயே ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஏடிஎம் மையத்தில் எப்போதும் சரியாக பணம் இருப்பது கிடையாது. இதனால் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் சில முதியவர்கள் தங்களின் தேவைக்கு பணம்

எடுத்துச்செல்லலாம் என இந்த ஏடிஎம் மையத்திற்கு ஆட்டோவில் வருகின்றனர். ஆனால் இந்த ஏடிஎம்மில் பணம் இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபோல் நடக்க முடியாத நிலையில் தள்ளாடியபடியும் வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஏடிஎம் மையத்தின் அருகில் 2 தனியார் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வங்கி ஏடிஎம் மையங்களில் 24 மணி நேரமும் பணம் இருந்துகொண்டே இருக்கிறது. அங்கு சென்றுதான் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுத்துச்செல்கின்றனர். இதுகுறித்து

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் கூறுகையில், இந்தியன் வங்கி ஏடிஎம்மில் பணம் இல்லை என்றால், தனியார் வங்கி ஏடிஎம்களில் மட்டுமே பணம் எடுக்கும் சூழல் ஏற்படுகிறது. ஆனால் இந்த தனியார் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்தால் இந்தியன் வங்கியிலிருந்து தனியார் ஏடிஎம் மையத்தை பயன்படுத்தியுள்ளீர்கள் என பைன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் வைக்காமல் இருப்பதற்கு இதுதான் காரணமா? பணம் வைக்கவில்லை என்றால் அவர்கள் எப்படியும் மாற்று வங்கிக்கு சென்றுதான் பணம் எடுக்க வேண்டும். அப்படி அவர்கள் பணம் எடுத்தால் அவர்கள் வங்கி கணக்கில் இருந்து பெனால்டி என்ற பெயரில் பணம் வசூலித்து விடலாம் என்ற கண்ணோட்டத்தில் தான் இந்த பொன்னகர் கிளை வங்கி செயல்பட்டு வருகிறதா? என

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் குமுறுகின்றனர். எப்போதுமே பணம் இல்லாமல் இருக்கும் வங்கி ஏடிஎம் எதற்கு? இத்தனைக்கும் வங்கி அருகில் தான் ஏடிஎம் உள்ளது எப்படியும் பணம் இருக்கும் என்று தொலைவிலிருந்து வரும் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் இல்லாமல் இருப்பது கண்டு பெருத்த ஏமாற்றத்துடன் அருகிலுள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்திற்கு சென்று பணம் எடுத்துச் செல்கின்றனர். இதே நிலை நீடித்தால் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் தனியார் வங்கிகளை தேடி செல்லும் நிலை ஏற்படும். எனவே இதுகுறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த ஏடிஎம் மையத்தில் எப்போதும் பணம் இருக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.