கோடை காலத்தில் கோழிகளை பாதுகாக்கும் வழிமுறைகள்!

0 439
Stalin trichy visit

திருச்சி கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் வே.ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கோழிகளுக்கு பொதுவாகவே கோடை காலங்களில் அதிகப்படியான இறப்பு ஏற்படுவதால் பண்ணையாளர்கள் வெப்ப அயர்ச்சியின் காரணமாக கோழிகள் இறக்கின்றனவா அல்லது ஏதேனும் தொற்று நோய்கள் ஏற்படுகிறதா? என்ற சந்தேகத்துடன் கையாளுகின்றனர். எனவே சரியான காலகட்டத்தில் தடுப்பூசி மருந்துகளை அளித்தல் நல்லது. குஞ்சு பொரித்த 7-ம் நாள் எப் 1 (வெள்ளை கழிச்சல் நோய்) மருந்தை கண்ணில் ஒரு சொட்டு விட வேண்டும். 28-ம்

நாள் லசோட்டா மருந்தை குடிநீரில் கலந்து அளிக்க வேண்டும். 56-ம் நாள் மறறும் ஒவ்வொரு 2 மாத இடைவெளியில் ஆர்.டீ.வி.கே. தடுப்பூசியை இறக்கைக்கு அடியில் தோலில் செலுத்துதல் வேண்டும். கோழிப்பண்ணைகளில் கூரை பெரும்பாலும் அதிகமாக வெப்பத்தை கடத்தக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது. எனவே கூரையின் மேற்புறம் பனை ஓலை, தென்னை ஓலை கொண்டு வேய்ந்து விடலாம். கோடை காலங்களில் வெப்ப மிகுதியின்

காரணமாக தீவனம் எடுக்கும் அளவு குறையும். இதனால் சத்துக்கள் குறைவாகவே கிடைக்கப்பெற்று எடை குறையும். முட்டை உற்பத்தியும் குறையும். எனவே குறைந்த அளவு சத்து மிகுந்த தீவனத்தை நான்கு அல்லது ஐந்து வேளைகளாக பிரித்து கொடுக்க வேண்டும். குளிர்ந்த மற்றும் சுத்தமான தண்ணீர் எப்போதும் கிடைக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.