அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இலங்கை தமிழர் மீது வழக்கு!

0 432
Stalin trichy visit

திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாமில் பாஸ்போர்ட் மற்றும் விசா காலாவதியான வெளிநாட்டினர் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 4ம் தேதி மாலை கொட்டப்பட்டு முகாமின் தனித்துணை கலெக்டர் ஜமுனாராணி, வருவாய் ஆய்வாளர் ரவி ஆகியோர் சிறப்பு முகாமுக்கு சென்றிருந்தனர். அப்போது முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழரான நிஷாந்தன் (வயது 38) என்பவர், வருவாய் ஆய்வாளரை

தகாத வார்த்தைகளால் திட்டி பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று தகராறு செய்துள்ளார். அத்துடன் வருவாய் ஆய்வாளர் மற்றும் தனித்துணை கலெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு மட்டுமின்றி, அவர்களை சிறப்பு முகாம் வளாகத்தில் இருந்து வெளியே செல்ல

முடியாதவாறு தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் ரவி கே.கே.நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் நிஷாந்தன் மீது கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் முகாம் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.