“பயனற்ற தண்ணீர் தொட்டி, அதையும் பயன்படுத்துவோம்” செய்துகாட்டிய கவுன்சிலர் ரமேசுக்கு குவியும் பாராட்டு!

0 602
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் வெளியே செல்பவர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில் தண்ணீர், நீர்மோர் குடித்து தங்களது தாகத்தை தீர்த்து வருகின்றனர். சிலர் இளநீர், தர்பூசணி, பழச்சாறு உள்ளிட்டவற்றை அருந்தி உடல் சூட்டை தணித்துக்கொள்கின்றனர். வெளியே செல்லும் பெண்கள் குடை பிடித்தப்படி சென்று வருகின்றனர். இந்த நிலையில் மக்களின் தண்ணீர் தேவையை அறிந்து திருச்சி மாநகராட்சி 46வது வார்டு பொன்மலையடிவாரம் சகாயமாதா தெருவில் பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல்

இருந்த தண்ணீர் தொட்டியை 46வது வார்டு கவுன்சிலர் கொட்டப்பட்டு கோ.ரமேஷ் தண்ணீர் தொட்டியை பொது மக்கள் பயன்படுத்த முடியுமா? என்று ஆய்வு செய்து, தொட்டியை புதுப்பிக்கும் வேலையை ஆரம்பித்தார். அதன்படி பணியாளர்களை கொண்டு தொட்டியின் மீது ஒட்டப்பட்டு இருந்த விளம்பர போஸ்டர்களை

அப்புறப்படுத்தி சுத்தம் செய்து தண்ணீர் லாரி மூலம் தண்ணீர் ஊற்றி பொது மக்களிடம் குடிநீருக்கு இல்லாமல் மற்ற எல்லா உபயோகத்திற்க்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதுடன், இரண்டு தினத்திற்க்குள்ளே சுண்ணாம்பு அடித்து பயன்படுத்தி கொள்ளலாம் என்றார். இந்த சேவையை பார்த்து மக்கள் சக்தி இயக்கத்திளரும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.