மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலர் டாக்டர். ஜெ.இராதாகிருஷ்ண ன்இன்று திருச்சிமகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து, மருத்துவமனையினைப் பார்வையிட்டும், நோயாளிகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கான பாதிப்புகள் மற்றும் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்தும் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, மூளைச்சாவு அடைந்த நபரிடமிருந்து உடல் உறுப்புகள் தானமாகப் பெற்றதில், சிறுநீரகத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட நபரை அரசு முதன்மைச் செயலாளர் பார்வையிட்டு உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவருடைய உறவினர்களிடம் உரையாடி அவர்களுக்குத் தேவையான அனைத்து மருந்துகள் மற்றும் சிசிக்சைகளையும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர்களிடத்தில் உறுதியளித்தார்.
பின்னர், கொரோனா நோய்த் தொற்று நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்டு வரும் மிக அதிநவீன சிகிச்சைப் பிரிவினையும், ரூபாய் 2 கோடி மதிப்பில் மார்பகப் புற்றுநோய் கண்டுபிடிக்கக் கூடிய டிஜிட்டல் மேமோகிராம் (Digital Mammogram )கருவியின் செயல்பாட்டினையும், ரூபாய் ஒரு கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் ஃப்ளோரோஸ்கோபி (Digital Fluroscopy) உபகரணங்களையும் முதன்மைச் செயலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின் போது, அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் கே.வனிதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ், உதவி நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா, துணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) டாக்டர் லட்சுமி, சிறுநீரக சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலகிருஷ்ணன், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் பிரபாகரன், டாக்டர் ரவி, மயக்கவியல் மருத்துவர் இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.