“தொழிற்சாலைகளுக்கான மாநில பாதுகாப்பு விருது” விண்ணப்பிக்க அழைப்பு!

0 373
Stalin trichy visit

திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் இணை இயக்குனர் (பொறுப்பு) பி.என்.சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விபத்தில்லா தொழிற்சாலைகள் மற்றும் பெரும் அளவில் விபத்து குறைத்துள்ள தொழிற்சாலைகளுக்கான தமிழக அரசின் மாநில பாதுகாப்பு விருதுகள் மற்றும் விபத்து குறைப்பு, உற்பத்தி திறன் அதிகரிப்பில் புதிய கண்டுபிடிப்பு அல்லது செயல்முறைக்கு தொழிலாளர்களுக்கான உயர்ந்த உழைப்பாளர் விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருச்சி,

கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தகுதியான தொழிற்சாலைகள் நிர்வாகத்தினர் மற்றும் தொழிலாளர்கள் 2019-ம் ஆண்டுக்கான விண்ணப்பத்துடன் 2017 மற்றும் 2018-ம் ஆண்டுக்கு விண்ணப்பிக்காத தகுதியான விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு ஆண்டுக்கும் தனித்தனியாக

விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அந்தந்த கோட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை அல்லது துணை இயக்குனர் அலுவலகங்களில் மாநில பாதுகாப்பு விருதுகளுக்கு ஒவ்வொரு திட்டத்துக்கும் ரூ.200-க்கான அஞ்சல் ஆணை மற்றும் உயர்ந்த உழைப்பாளர் விருதுக்கு ரூ.100-க்கான அஞ்சல் ஆணைகளுடன் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.