பொதுக்கூட்டத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் அன்பில் மகேஸ் உருக்கம்!

0 391
Stalin trichy visit

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசு நிதிநிலை அறிக்கை சிறப்புகளை விளக்கியும், உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தும் மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் காட்டூர் பகுதி திருவெறும்பூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் நீலமேகம் தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். தலைமைக் கழகப் பேச்சாளர் செங்கை கெ.சந்தானம், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்

செந்தில்குமார் கலந்துகொண்டு உரையாற்றினர். இக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசுகையில், நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுனர்களிடம் ஆலோசனை பெற்று தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையாக தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கை உள்ளது. ‘இல்லம் தேடிக் கல்வி, “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம்” போன்ற திட்டங்களை வழங்கிய முதலமைச்சருக்கும், உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கும், அதற்காக உழைத்த கழகத்தொண்டர்களுக்கும் எனது பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். கூட்டத்தில் இனிக்கோ இருதயராஜ் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.