பெரும்பிடுகு முத்தரையரின் 1346வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

0 380
Stalin trichy visit

திருச்சி…பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1346வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (மே.23) திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக கழக முதன்மை அலுவலகத்தில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் அவருடைய திருவுருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்தநிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி,மாநகரச் செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், காடுவெட்டி தியாகராஜன்,ஸ்டாலின் குமார் பழனியாண்டி கதிரவன் மற்றும் பகுதி செயலாளர்கள் கண்ணன்,காஜாமலை விஜி,இளங்கோ உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்… இதனைத் தொடர்ந்து திருச்சி ஒத்தக்கடை உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் திருஉருவ சிலைக்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு ,இளைஞர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்…

 

Leave A Reply

Your email address will not be published.