“ஸ்டார்ட் அப் மேளா என்னும் போட்டி” பரிசுகளை அள்ளிச்சென்ற மாணவர்கள்!
அதிக தொழில் முனைவோர்களை உருவாக்கும் முயற்சியில், திருச்சி தூய வளனார் மேலாண்மை நிறுவனம் ஸ்டார்ட் அப் மேளா என்னும் போட்டியை நடத்தியது. போட்டியை தொப்பி வாப்பா பிரியாணி நிறுவனர் உமர் முக்தார் பிரதீப், இந்தியா தொழில் கூட்டமைப்பு திருச்சி மற்றும் சிஸ்ட்டி பிளஸ் நிறுவனத்தின் தலைவர் அரசி அருள் தொடங்கி வைத்தனர். கல்லூரி அதிபர் லியோனார்டு
பெர்னாண்டோ, முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர், மேலாண்மை இயக்குனர் பால்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர். விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களை பிறருடைய விமர்சனங்களிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்றும், மாணவர்களிடம் தங்களின் வெற்றி பயணம் குறித்து பேசினர். 33 குழுக்கள் கலந்துகொண்ட போட்டியில் 6 குழுக்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அஜித் சூர்யாஸ் மழையிலும் வெயிலிலும் இயங்கும் தட்ப நிலைக்கு ஏற்ற ஏர் கூலர் செய்யும் வணிக யோசனைக்கு முதல் பரிசாக ரூ.50,000 வழங்கப்பட்டது.
இரண்டாம் பரிசு ரூ.30,000 பம்பாய் கே ஜி சோமையா கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக சக்கர நாற்கலிகளை தயாரிக்கும் தொழில் திட்டத்தை சமர்பித்தார்கள். மூன்றாம் பரிசு ரூ.20,000 கண் பார்வையற்றோர்களுக்கான இடம் கண்டறியும் சாதனத்திற்காக திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மாணவியர்களுக்கு வழங்கப்பட்து. தூய வளனார் மேலாண்மை மாணவர்கள் தங்கள் தொழில் யோசனைகளையும் தனியாக
சமர்ப்பித்தனர். அவர்களில் சிறந்து தொழில் யோசனைக்கு ரூ.25,000, ரூ.15,000 மற்றும் ரூ.10,000 வழங்கப்பட்டது. பெண்கள் பாதுகாப்புக்காக சிறப்பு கைக்கடிகாரம் செய்யும் தொழில் யோசனைக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு , “சிறந்த கண்டுபிடிப்புக்கான” விருதினையும், ரூ.10,000மும் வழங்கியது. நிறைவு விழாவில் மேலாண்மை மாணவர் கிஷோர் ஆன்டனி நன்றி கூறினார்.