அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல்; 16ம் தேதி நடக்கிறது!

0 266
Stalin trichy visit

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் வருகிற 16ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.35 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சேலம்

புறநகர் மாவட்ட புரட்சித்தலைவி பேரவை செயலாளர் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் தலைமையிலும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ஜெயசங்கர் முன்னிலையில் உட்கட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் குமாரவயலூர், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய 4 இடங்களில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடைபெறுகிறது என அ.தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.