பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

0 305
Stalin trichy visit

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப்பணித்துறை மற்றும் ஹீடு இந்தியா கங்காரு கருணை இல்லம் சார்பில் KT ஜங்ஷன் தில்லை நகர் சிக்னலில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மரியாதைக்குரிய போக்குவரத்து துணை ஆணையர் ஜோசப் நிக்ஸன் (வடக்கு பிரிவு) வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் வாகனங்களுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். ஹீடு இந்தியா செயல் இயக்குனர் ஆர்.டி.என் நிறுவனர் C R.ராஜா மற்றும் R.தீபா இணைந்து வழிநடத்தினார்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர், பேராசிரியர்கள், தன்னார்வத் தொண்டர்கள், மற்றும் சமூக பணித்துறை மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இறுதியில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து துணை ஆணையர் முன் சாலை விதிகளை கடைப்பிடிப்பேன் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.