2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் அடைப்பு!

0 370
Stalin trichy visit

திருச்சி மாநகரகாவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் ,வாகன தணிக்கை செய்து குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார். கடந்த 25.03.22-ந் தேதி பொன்மலைப்பட்டி பஜார் ஆஞ்சநேயர்கோவில் அருகில், நடந்து சென்றவரிடம் வாளை காட்டிபணம் ரூ.1000 பறித்துசென்றதாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவுசெய்து, வழக்கில் சம்மந்தப்பட்ட ரவுடி சிவக்குமார் (எ) முகமதுரபீக் (வயது 35) என்பவரை கைது செய்து

 

 நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் ரவுடி சிவக்குமார் (எ) முகமதுரபீக் மீத் பல்வேறு காவல் நிலையங்களில் 13 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும் இவர் ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தண்டனை பெற்று, நீதிமன்றபிணையில் இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், கடந்த 27.03.22-ந் தேதி ஏர்போர்ட், வயர்லெஸ்ரோடு, முல்லைநகர் சந்திப்பில் நடந்து சென்றவரிடம் கத்தியைகாட்டிபணம் ரூ.500 பறித்துசென்றதாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, வழக்கில் சம்மந்தப்பட்ட ரவுடி கௌரீஷ் (எ) நவநீதிகிருஷ்ணன் (வயது 25) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் ரவுடிகௌரீஷ் (எ) நவநீதிகிருஷ்ணன் மீதுபல்வேறு காவல் நிலையங்களில் 10 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, ரவுடிகள் சிவக்குமார் (எ) முகமதுரபீக் மற்றும் கௌரீஷ் (எ) நவநீதிகிருஷ்ணன்

 

 ஆகியோர்கள் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பவர்கள் என விசாரணையில் தெரியவருவதாலும், மேற்கண்டவர்களின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்கண்டவர்களை குண்டர் தடுப்புகாவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் குற்றவாளிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீதுசட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.