தீப்பிடித்தால் எப்படி அணைப்பது குறித்து விழிப்புணர்வு!

0 307
Stalin trichy visit

தீ தொண்டு நாள் வார விழாவானது ஏப்ரல் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சி மாவட்டம் துறையூர் தீயணைப்பு நிலையம் சார்பாக தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையில், தீயணைப்பு துறையினர் பேருந்து நிலையம், பாலக்கரை உள்ளிட்ட

பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் பொதுமக்களிடம் தீ தடுப்பு குறித்த பிரச்சாரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார். இத்துண்டுப் பிரசுரங்களில் வீட்டிலுள்ள சிலிண்டர்களில் தீப்பிடித்தால் உடனடியாக அதை எப்படி அணைப்பது என்பது குறித்தும், மனிதர்கள் உடலில் தீப்பிடித்தால் அதை எவ்வாறு அணைப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கியிருந்தன.

Leave A Reply

Your email address will not be published.