1700 போலி மது பாட்டில்கல் பறிமுதல் , மது அமலாக்க தனிப்பிரிவு போலீசார் அதிரடி 

0 606
Stalin trichy visit

திருச்சி அருகே உள்ள மணிகண்டம் செட்டி ஊரணி பட்டி பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி இவரது வீட்டை காரைக்காலை சேர்ந்த சௌந்தரராஜன் கார்த்திக் (35) என்பவர் வாடகைக்கு எடுத்து பாண்டிச்சேரியில் போலி மதுபானம் தயாரிப்பதற்குரிய மூலப்பொருள்களை வாங்கிவந்து திருவாரூரை சேர்ந்த பக்கிரிசாமி மகன் பாலமுருகன்(32) ராமு மகன்கள் வெற்றிச்செல்வன் (22) விஜயகுமார் (23) ராமமூர்த்தி மகன் சூர்யா (25) ஆகியோரை வைத்து போலி மதுபானங்களை தயாரித்து போலி லேபிள்களை பாட்டில்களில் ஒட்டி திருச்சி சுற்றுவட்ட மாவட்டங்களுக்கு
கள்ள மார்க்கெட்டில் கார்த்திக் மதுபானங்களை விற்பனை செய்து வந்துள்ளான்.இது சம்பந்தமாக மது அமலாக்க தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் சுஜாத்தா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனை செய்தபோது கார்த்திக், பாலமுருகன், வெற்றி செல்வன், சூர்யா, விஜயகுமார், ஆகிய 5 பேரும் போலி மதுபானங்களை பாட்டிலில் நிரப்பி ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டிருந்தபோது பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 1700 கோட்டர் மதுபான பாட்டில்கள் இன்னோவா கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து சுஜாதா திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார் அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி முத்தரசு தலைமையில் திருவெறும்பூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மீராபாய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.பின்னர் பிடிபட்ட 5 பேரையும் 1700 மது பாட்டில்களையும் இன்னோவா காரையும் திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் இன்ஸ்பெக்டர் சுஜாதா ஒப்படைத்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதோடு தப்பி ஓடிய வீட்டின் உரிமையாளர் வெள்ளசாமியைத் தேடி வருகின்றனர்.இச்சம்பவம் திருச்சியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.