திருநெடுங்களம் கோவிலில் சந்திரசேகர அம்பாளுக்கு சிறப்பு பூஜை!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்து துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதர் திருக்கோவிலில் நேற்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சந்திரசேகர், அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சந்திரசேகர், அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில்
சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர். சிறப்பு ஆராதனை பூஜைகளை திருக்கோவில் அர்ச்சகர் சோமசுந்தர சிவாச்சாரியார், ரமேஷ் சிவாச்சாரியார் ஆகியோர் கோவில் செயல் அலுவலர் வெற்றிவேல் முன்னிலையில் செய்து இருந்தனர்.