மொபட்டை இரவல் தராதவருக்கு கத்திக்குத்து!

0 314
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டரை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 41). இவர் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதற்காக கிளம்பி உள்ளார். அப்போது எட்டரை நடுத்தெருவில் சேர்ந்த கருணைக்கடல் (வயது 32) என்பவர் ராமலிங்கத்தின் மொபட்டை

இரவல் கேட்டுள்ளார். அப்போது அவர் நான் வேலைக்கு கிளம்பி கொண்டு உள்ளேன் வண்டியை இரவல் தர முடியாது என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த கருணைக்கடல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமலிங்கத்தை

குத்தியுள்ளார். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.