சேதுராப்பட்டி ரெனே பிரேக் லைனிங் தொழிற்சாலையில் தீ தடுப்பு ஒத்திகை!
திருச்சி தீயணைப்பு துறை சார்பாக தீ தடுப்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி சேதுராப்பட்டி ரெனே பிரேக் லைனிங் தொழிற்சாலையில் நடந்தது. பின்னர் தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன் தலைமையில் நிலைய அலுவலர் மெல்கியூராஜா முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள்
தீத்தடுப்பு உபகரணங்களை வைத்து புகை மூலம் தீயை அணைத்தல், ஈரசாக்கு மூலம் தீயை அணைத்தல் போன்றவற்றை செய்து காட்டினர். இந்த தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டால் எப்படி செயல்படுவது, விபத்துகளில் சிக்கிய வாகனங்களை துரிதமாக மீட்பது, கட்டிட இடிபாடுகளில்
சிக்கிக்கொண்டவர்களை விரைந்து காப்பாற்றுவது குறித்தும் மேலும் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி அதை கையாளுவது என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்கப்பட்டது. இதில் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.