“செல்வமுத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம்” அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்!
திருச்சி மாவட்டம் பொன்மலை சீட்டைப் பகுதியில் அமைந்துள்ள செல்வமுத்து மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி செல்வ முத்து மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதையடுத்து செல்வ முத்து மாரியம்மனை அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்து தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர் தர்மராஜ் வரதராஜன், முருகானந்தம், தவசீலன், செந்தில் மற்றும் கோயில் நிர்வாக கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.