அதிமுக புறநகர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருவெறும்பூர் தொகுதியின் அமைப்பு தேர்தல் – 2022 போட்டிகான விருப்பமனு வழங்கும் பணி நடைப்பெற்றது

0 322
Stalin trichy visit

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருவெறும்பூர் தொகுதியின் அமைப்பு தேர்தல் – 2022 ல்  போட்டியிடுவதற்கான விருப்பமனு வழங்கும் பணி  திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

இதற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பி., யுமான குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். அப்போது தேர்தல் ஆணையர்களான மேட்டூர் நகர செயலாளரும், எம்பி., யுமான சந்திரசேகர், ஓமலூர் எம்எல்ஏ., மணி ஆகியோரின் தலைமையிலான 14 துணை ஆணையர்களிடம்  திருவெறும்பூர் வடக்கு,  தெற்கு ஒன்றியங்கள், துவாக்குடி நகரம், கூத்தப்பார் பேரூராட்சி, திருவெறும்பூர் பகுதி, அரியமங்கம் பகுதி மற்றும் பொன்மலை பகுதி உள்ளிட்ட அனைத்து கிளை பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தலி போட்டியிடுபவர்கள் விருப்ப மனுக்களைப் பெற்றனர்.தொடர்ந்து மனுக்களைப் பெற்றவர்கள் அதனைப் பூர்த்தி செய்து ஆணையர்களிடம் வழங்கினர்.அப்போது திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பதவிகளுக்கு தற்போதைய கிழக்கு ஒன்றிய செயலாளர் ராவணன் விருப்பமனு அளித்தனர்.

அதேப்போல் மேற்கு ஒன்றிய செயலாளர் கும்பக்குடி கோவிந்தராஜ் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர் பதவிகளுக்கு விண்ணப்பித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.வடக்கு ஒன்றியத்திற்கு வேங்கூரை சேர்ந்த கார்த்திக் உட்பட பலர் விண்ணப்பித்துள்ளார்.இதேபோல், துவாக்குடி நகர செயலாளர், கூத்தப்பார் பேரூர் செயலாளர், அரியமங்கலம் மற்றும் திருவெறும்பூர், பொன்மலை பகுதிகளின் செயலாளர் மீண்டும் பகுதி செயலாளர் பதவிக்கு வின்ன பித்தனர் புதிய நிர்வாகிகளும் இதேப்போல் விண்ணப்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், முக்கிய பதவியான அந்தந்த எல்லை செயலாளர் பதவிகளுக்கு நிர்வாகிகளைத் ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டதாக பரவிய தகவலைத் தொடர்ந்து சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.