மினிவேன்-மொபட் மோதல்; வாலிபர் பலி!

0 332
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நெருஞ்சலக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் பழனிவேல் மகன் 37 வயதான முருகானந்தம் கூலி வேலையாக பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவர் தனது மொபட்டில் அபிஷேகபுரம் பகுதியை கடந்து செல்லும் போது தண்ணீர் பந்தலுக்கு இடையே எதிரே வந்த மினி வேனும், மொபட்டும்

நேருக்கு நேர் மோதியதில் மொபட்டில் சென்ற முருகானந்தம் சம்பவ இடத்திலேயே பலியானார். இவருக்கு நித்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த முருகானந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.