“போலி மதுபான ஆலையை கண்டுபிடிக்காமல் இருந்த” மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர், ஏட்டு பணியிடை நீக்கம்!

0 356
Stalin trichy visit

திருச்சி அருகே உள்ள மணிகண்டம் ஊரணி பட்டியில் போலி மதுபான ஆலை கடந்த 3 மாதங்களுக்கு மேலாக செயல்பட்டு வந்தது குறித்து மது ஒழிப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாத்தாவிற்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் 14ம் தேதி சம்பவ இடத்திற்கு தனிப்படை போலீசார் உடன் சென்ற சுஜாத்தா அப்பகுதியிலுள்ள வெள்ளைச்சாமி என்பவருக்கு சொந்தமான வீட்டில் போலியாக தயாரித்து 1,700 மதுபாட்டில்கள் மது தயாரிக்க பயன்படுத்தக்கூடிய மூலப்பொருட்கள், பாட்டிலில் ஒட்டும், ஸ்டிக்கர்கள் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்மந்தமாக வெள்ளைச்சாமியின் வீட்டை வாடகைக்கு எடுத்து மதுபானம் தயாரித்த காரைக்காலைச் சேர்ந்த கார்த்திக்(வயது 35), அவரது நண்பர்

காடுவெட்டியை சேர்ந்த சுந்தர்(வயது 37), திருவாரூரைச் சேர்ந்த பால முருகன்(வயது 32), வெற்றிச்செல்வன்(வயது 22), விஜயகுமார் (வயது 23), சூர்யா(வயது 25) ஆகிய 6 பேரையும் கைது செய்து மதுபானம் கடத்த பயன்படுத்திவந்த இன்னோவா கார் மற்றும் டூவீலர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மணிகண்டம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக செயல்பட்டு வந்த போலி மதுபான ஆலையை திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மீராபாய் மற்றும் மணிகண்டம் தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ் ஆகியோரை ஆலையை கண்டு பிடிக்காத காரணத்திற்காக திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் இரண்டு மாத காலம் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.