மாரியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி தீச்சட்டி, பால்குடம் ஊர்வலம்!
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி பாலக்கரை செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம் எடுத்துக்கொண்டு சமயபுரம் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். முன்னதாக செல்வ முத்து மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம்,

தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.