முதியவர் அடித்து கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீச்சு!

0 578
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் முசிறி அருகே அமைந்துள்ள தா.பேட்டை நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் சரவணன்(வயது 62). ஆடுகள் மேய்த்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
மனைவி தேவகியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 20 வருடங்களாக சரவணன் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சரவணன் அப்பகுதியில் உள்ள கிணற்றில்

சடலமாக நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் அருகில் உள்ள வயல் வெளி பகுதியில் மர்ம நபர்கள் சரவணனை அடித்து கொன்று தூக்கி வந்து கிணற்றில் வீசி விட்டுச் சென்ற சம்பவம் தெரியவந்துள்ளது. இதையடுத்து தா.பேட்டை போலீஸார் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தை திருச்சி போலீஸ் எஸ்பி சுஜித்குமார் நேரில் பார்வையிட்டு வழக்கு குறித்து ஆலோசனை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.