திருச்சியில் வருகிற 24ம் தேதி ஓவியப்பயிற்சி முகாம்!

0 451
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம் முழுவதும் செயல்படும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக உலக ஓவிய தினத்தன்று, ஓவியப்பயிற்சி முகாம், மாநில அளவிலான கலைக்காட்சி நடத்தப்பட உள்ளது. முகாமில் மரபுசார்ந்த ஓவியங்கள், துணி ஓவியங்கள், கண்ணாடி ஓவியங்கள், பேப்பர் ஓவியங்கள், பனைமரம் ஓவியங்கள், வாட்டர் கலர் ஓவியங்கள், பென்சில் ஓவியங்கள்

 

உள்ளிட்ட ஓவியங்களும் இடம் பெறுகிறது. ஓவிய பயிற்சி முகாம் உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், நைட்சாய்ஸ் டெப்போரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம் திருச்சி-06 என்ற இடத்தில் வருகிற 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். மாலை 3 மணிக்கு மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அவற்றில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஓவியங்கள் மாநில அளவில் சென்னையில்

நடைபெறவுள்ள நிறைவு விழாவில் காட்சிக்கு வைக்கப்படும். மேலும் கலந்து கொள்ளும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி பொருட்கள், பயிற்சி சான்றிதழ், மதிய உணவு வழங்கப்படும். இந்த வாய்ப்பை திருச்சி மாவட்டத்தில் உள்ள கலை ஆர்வமிக்க மாணவ-மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.