அன்னதான விழாவை தொடங்கி வைத்தார் கவுன்சிலர் செந்தில்!
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் படி, மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் காட்டூர் மெயின் சாலையில் சமயபுரம் மாரியம்மன் சித்திரை பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு தனபாக்கியம் அன்னதான விழாவினை ஏற்பாடு செய்திருந்தார். அதனை துவக்கி வைத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார் கவுன்சிலர்

செந்தில். தொடர்ந்து தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் காவேரி நகரில், மலையப்ப நகரில் சமீபத்தில் இயற்கை எய்திய நபர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, சுகாதார ஆய்வாளரை அழைத்து சென்று இறப்பு சான்றிதழை பதிவு செய்தார். பின்னர் காவேரி நகரில் வசிக்கும் நவமணி என்பவரை விஷ வண்டு கடித்து BHEL மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். அப்போது காவேரி நகர் சொர்ணமணி மற்றும் கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.