திருச்சி சின்னக்கடை வீதி, சஞ்சீவி ராவ் சந்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் கணேசன் (வயது 38). இவர் லோடுமேனாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இவரது மனைவி யோகபிரியா (வயது 33). இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனைவி யோகபிரியா கணவருடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதையடுத்து
வீட்டில் இருந்த அறையினுள் கணேசன் உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டதாக தெரிகிறது. இதைப்பார்த்த கணேசனின் தாயார் ஆதிலட்சுமி மற்றும் உறவினர்கள் கதவை திறக்குமாறு கணேசனிடம் கூறியும் கதவை திறக்கவில்லை. இதையடுத்து சுமார் 11.30 மணி அளவில் வீட்டின் கீழ்புறம் உள்ள கடையில் வேலை செய்யும் சிலரின் உதவியுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது பேன் மாட்டும் கொக்கியில் சேலையால் தூக்கில் தொங்கி கொண்டிருந்த கணேசனை மீட்டு சிகிச்சைக்காக டவுன் ஸ்டேஷன் ரோட்டில்
உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு இருந்த டாக்டர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் எனக் கூறியதை அடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இறந்துவிட்டார் என திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த கோட்டை வழக்குப்பதிவு செய்து கணேசனின் வீட்டுக்கு சென்று சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.