திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற
உள்ளது. இதனை தொடர்ந்து முன்னாள் படைவீரர்களுக்கான சுயவேலைவாய்ப்பு கருத்தரங்கும் நடக்க உள்ளது. அன்றையதினம் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சார்ந்தோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் வாயிலாக இரட்டை பிரதிகளில் மாவட்ட கலெக்டரிடம் நேரில் அளித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.