ஜாதி சங்க பிளக்ஸ் பேனரை கிழித்த 4 பேர் மீது வழக்கு!

0 372
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள மகேந்திரமங்கலம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவர் தனது தம்பி ராஜசேகரனுடன் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது கிருஷ்ணாபுரம் பூஞ்சோலை மாரியம்மன்

 

கோவில் அருகே இருந்த அவர் சார்ந்த ஜாதி சங்க பிளக்ஸ் பேனரை சிலர் கிழித்துக் கொண்டிருந்தனர். இதைக்கண்ட மதியழகன் சத்தம் போடவே அங்கிருந்த நபர்கள் ஓடிவிட்டனர். இதுகுறித்து மதியழகன் தொட்டியம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசநல்லூர் பகுதியை சேர்ந்த சிவசங்கர்(வயது 18), யுவராஜ் (வயது 21), சரவணன் (வயது 18) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.