லாரியில் கடத்த முயன்ற 556 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்; 4 பேர் தப்பியோட்டம்!

0 324
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், லால்குடி சிவன் கோவில் அருகே ஸ்ரீமதி ஏஜென்சிஸ் என்ற சிமெண்ட் கடையில் சிமெண்ட் வியாபாரம் என்ற பெயரில் இந்தக் கடையின் அருகே உள்ளே குடோனில் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டும், குடோனுக்கு அருகே ரேஷன் அரிசியை மாவாக அறைக்கும் அரவை மிஷின் இருக்கும் அறையினை பூட்டி சீல் வைத்தும், லாரியில் கடத்த முயன்ற 556 மூட்டை ரேஷன் அரிசி மூட்டைகள், 1 மூட்டை கோதுமை, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி ஆகியவற்றை லால்குடி வட்ட வழங்கல் அலுவலர் விஜய் உள்ளிட்ட அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த கீர்த்திவாசன், மற்றும் லாரி ஒட்டுநர் உள்ளிட்ட 4 பேரை திருச்சி குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுதுறை போலீஸார் தேடி

வருகின்றனர். திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் மற்றும் லால்குடி ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள குடோனில் 25 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் லால்குடி வட்ட வழங்கல் அலுவலர் விஜய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. லால்குடி சிவன் கோவில் அருகே உள்ள ஸ்ரீமதி ஏஜென்சிஸ் என்ற சிமென்ட் விற்பனை கடையில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் லால்குடி வட்ட வழங்கல் அலுவலர் விஜய், தனி வருவாய் ஆய்வாளர் இளவரசி உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடியாக அங்கு சென்று பார்த்தபோது. சிமெண்ட் கடையில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றி கடத்த முயன்றனர். அப்போது அதிகாரகளை கண்ட கடை

உரிமையாளர் கீர்த்திவாசன், லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். மேலும் சிமெண்ட் கடையை அதிகாரிகள் சோதனையிட்டதில் சிமெண்ட் கடை என்ற பெயரில் ரேஷன் அரிசியை அரைத்து மூட்டை மூட்டையாக கடத்தப்படுவது தெரிய வந்தது. கடத்த முயன்ற லாரியில் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் குடோனில் பதுக்கி வைத்திருந்த 556 ரேஷன் அரிசி மூட்டைகள, 1 கோதுமை மூட்டை ஆகியவற்றையும் கடத்தல் லாரியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அரிசி அரவை மில், எடை மிஷின், மூட்டை தைக்கும் இயந்திரம், ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த குடோன் ஆகியவற்றை

அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் பறிமுதல் செய்த லாரி மற்றும் 556 மூட்டைகள் ரேஷன் அரிசியையும் திருச்சி கே.கே. நகர் குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுதுறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். போக்குவரத்து நெரிசலான இப் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரிகள் துணையோடு ரேஷன் அரிசி கடத்தல் தொழில் நடந்து வந்த நிலையில் இன்று திடீரென அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்தது அப் பகுதி மக்களை ஆச்சரியத்திலும், வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.