திருச்சி அருகே லாரி டிரைவர், கிளீனரை மிரட்டி செல்போன்,பணம் பறித்த விவகாரம் – 3 பேர் கைது!

0 366
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் கடைவீதியில் கடந்த ஜூன் மாதம் இரவில் லாரியை நிறுத்திவிட்டு உணவு அருந்த சென்ற போது லாரி டிரைவர்,கிளீனரை மிரட்டி செல்போன்,பணம் பறித்த வழக்கில் இரண்டு மாதத்திற்கு பின் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மணப்பாறை அருகே குமரவாடி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(40). லாரி டிரைவரான இவர் கடந்த ஜூன் மாதம் 26 ந்தேதி இரவு திருச்சியில் இருந்து இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு பீகாருக்கு சென்று கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த லாரி கிளீனர் உமாசங்கர் சங்கர் என்பவரும் உடன் வந்தார்.அப்போது சமயபுரம் கடைவீதியில் இரவில் டிபன் சாப்பிடுவதற்க்காக தனியார் திருமண மண்டபம் எதிரே லாரியை நிறுத்திய போது மர்ம நபர்கள் சிலர் டிரைவர் மற்றும் கிளீனரை மிரட்டி 2 செல்போன் மற்றும் 8 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து லாரி டிரைவர் வெங்கடேஷ் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் வழக்கில் தேடப்பட்டு வந்த மர்ம நபர்கள் 2 மாதத்திற்குப் பின் வாகன சோதனையின் போது குற்றவாளிகள் போலீசாரிம் சிக்கினர்.

 

விசாரணையில் தாளக்குடியைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ்(20), மண்ணச்சநல்லூர் இந்திராரைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன்(20), அஜித்குமார் (20) ஆகியோர் லாரி டிரைவரிடம் செல்போன்,பணம் திருடியதை ஒப்புக் கொண்டனர்.பின்னர் மூவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.. கைது செய்த அனைவரையும் திருச்சி ஜேஎம் 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மனப்பாறை கிளைச் சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.